”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

சனி, 13 செப்டம்பர், 2014

விளையாட்டுக்கலை


விளையாட்டுக்கள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர்,சிறுமியர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன.







விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.  


ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
வாலை குறைத்து வரும் நாய் தான்
அது மனிதர்க்கு தோழனாடி பாப்பா

பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும்
புறம் சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
தெய்வம் நமக்கு துணை பாப்பா
ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா

காலை எழுந்த உடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
காலை எழுந்த உடன் படிப்பு

அச்சம் தவிர்
ஆன்மை தவறேல்
இடைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகமும் புகழும்
தவமும் திறமும் தனமும் கணமும்
முருகா முருகா முருகா

ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவ
ம்
பாப்பா ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
 ஓடி விளையாடு பாப்பா


     என்று பாரதி, விளையாட்டின் மேன்மையறிந்து அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார்.

விளையாட்டுக்கள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அமைகின்றன. மகளிர் விளையாட்டுகள் அக விளையாட்டுகளாகவும், ஆடவர் விளையாட்டுகள் புற விளையாட்டுகளாகவும் உள்ளன.

பம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்துவிளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் முதலியன சிறுவர் விளையாடுவன.

பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம் என்பன சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள்.

 

பண்டையக்காலத்து விளையாட்டுகள்:


வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர்.  வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.

பண்டைய நாளில் பெண்கள் வட்டாடுதல், அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.
அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் ஆகும். இது யானைப்போர்  காண்பதற்கான திடலாகும்.


காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.

தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது.

ஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.

நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக