”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர்களின் கலைகளுள் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டுப்பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது.

துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:  

தாளம்

குடம்

உடுக்கை
உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்

வில்லுப்பாட்டின் தோற்றம்


வில்லுப்பாட்டின் தோற்றம் இன்றும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனைக்கொண்டு வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வில்லுப்பாட்டு கச்சேரி

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.

வில்லுப்பாட்டின் அமைப்பு


வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்:

காப்பு விருத்தம்


இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும்.

வருபொருள் உரைத்தல்


குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.  இது பாடலாக அமையப்பெறும்.

குருவடி பாடுதல்


தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்

கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும்.

நாட்டு வளம்


கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.

கதைக்கூறு


நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.

வாழிபாடுதல்

 

இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.

இவ்வாறு தமிழர்கள் தங்களுடைய அன்றாடவாழ்வில் நடக்கும் நிகழ்வுலையும், அவர்களுடைய சுக, துக்கங்களையும் கலை என்ற வார்த்தையில் வைத்து தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சாரதையும் வளர்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக