”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

புதன், 17 செப்டம்பர், 2014

முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி




முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்ள கைக்கடிகாரங்களோ, சுவர்க்கடிகாரங்ளோ பயன்பாட்டில் கிடையாது. பகல் நேர சூரிய ஒளி நிழலின் அளவைக்கொண்டு நேரத்தை அறிந்துகொள்வார்கள். அதிகாலையில் தங்கள் வயலுக்குப் புறப்பட வேண்டிய நேரத்தை அறிந்துகொள்ள சிற்றூர் விவசாயிகள் கீழே குறிப்பிட்ட பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.












செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சில்லு விளையாட்டு


தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும்.
உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.


1.   உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.
2.  உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.   எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.
3.   பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.

மச்சு ஆட்டம்




 

உத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள்.
கடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும். பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க
வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.




சில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார்.

பூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

சனி, 13 செப்டம்பர், 2014

விளையாட்டுக்கலை


விளையாட்டுக்கள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர்,சிறுமியர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன.







விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.  


ஓடி விளையாடு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு பாப்பா

பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா
அந்த பசு மிக நல்லதடி பாப்பா
வாலை குறைத்து வரும் நாய் தான்
அது மனிதர்க்கு தோழனாடி பாப்பா

பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும்
புறம் சொல்லலாகாது பாப்பா
பொய் சொல்ல கூடாது பாப்பா
தெய்வம் நமக்கு துணை பாப்பா
ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா

காலை எழுந்த உடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா
காலை எழுந்த உடன் படிப்பு

அச்சம் தவிர்
ஆன்மை தவறேல்
இடைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகமும் புகழும்
தவமும் திறமும் தனமும் கணமும்
முருகா முருகா முருகா

ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவ
ம்
பாப்பா ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
 ஓடி விளையாடு பாப்பா


     என்று பாரதி, விளையாட்டின் மேன்மையறிந்து அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார்.

விளையாட்டுக்கள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அமைகின்றன. மகளிர் விளையாட்டுகள் அக விளையாட்டுகளாகவும், ஆடவர் விளையாட்டுகள் புற விளையாட்டுகளாகவும் உள்ளன.

பம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்துவிளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் முதலியன சிறுவர் விளையாடுவன.

பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம் என்பன சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள்.

 

பண்டையக்காலத்து விளையாட்டுகள்:


வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர்.  வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.

பண்டைய நாளில் பெண்கள் வட்டாடுதல், அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.
அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் ஆகும். இது யானைப்போர்  காண்பதற்கான திடலாகும்.


காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.

தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது.

ஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.

நன்றி!


வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சிற்பக்கலை


மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது    சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. தமிழ் நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பி எனப்படுவான்.

கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என கூறுவர்.  
கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன



வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழுவடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் புடைப்புச் சிற்பங்கள் என்றும் வகைப்படுத்துவர்.

கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும், அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து தம் கலையுணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.


 
தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.




 
இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்களிலும் நம் நாட்டு லெம்பா பந்தாய்பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.